Pages

Monday, March 10, 2014

போதுமடா சாமி போதும்!!

சரித்திரம் அதிகம் கேட்ட வார்த்தைகள்- "கொல் "கொள்ளையடி"
கட்டில்கள் அதிகம் கேட்ட வார்த்தைகள்- "தழுவு , முத்தமிடு"
தொட்டில்கள்  அதிகம் கேட்ட வார்த்தைகள்- "ஆராரோ" ,"சனியனே"
விலைமகள் அதிகம் கேட்ட வார்த்தைகள்- "உனக்குஎப்பொது கல்யாணம்?"
வகுப்பறைகள் அதிகம் கேட்ட வார்த்தைகள்- "உருப்படமாட்டாய்"
பூங்காக்கள் அதிகம் கேட்ட வார்த்தைகள்- "இன்னொரு ஜென்மம் என்று ஒன்று இருந்தால்"
தொலைபேசி அதிகம் கேட்ட வார்த்தைகள்- "Miss u so much"
மயானங்கள் அதிகம் கேட்ட வார்த்தைகள்- "கடைசியாய் எல்லாரும் முகம் பாத்துகோங்க"
மேடைகள் அதிகம் கேட்ட வார்த்தைகள்- "சவால் விடுகிறேன்"-சபதம் செய்கிறேன்"
ரயிலடிகள் அதிகம் கேட்ட வார்த்தைகள்- ""மறக்காமல் கடிதம் போடு"
குழந்தைகள் அதிகம் கேட்ட வார்த்தைகள்- "அப்பா கோபமாயிருக்கிறார்"
மருத்துவமனைகள் அதிகம் கேட்ட வார்த்தைகள்- "இனிமேல் ஆண்டவன் விட்ட வழி"


 
"இந்த புளித்த வார்த்தைகள் மாறும்போது சலித்த வாழ்க்கை சட்ரென்று மாறும்"

No comments:

Post a Comment