
Below lines are from me and edited by dad;)
Thank you dad :)
இருபது(+) வயதொரு இனிய நிலை -எந்தன்
அருகினிலே ஒரு பருவச் சிலை-காதல்
அற்புதம் படைத்திடும் அழகு கலை-அதைக்
கற்பனை செய்திட நேரமிலை
புன்னைகை பூத்திடும் அழகுகினை -ஒளிப்
பொன்னையாவும் தேவையில்லை-அந்த
இளநகை மங்கையர்க் கனியெனவெ-அந்த
இறைவன் படைத்ததில் வியப்புமில்லை
பிள்ளையின் குரலில் அவள் பேசயிலே-ஒரு
பிள்ளையின் மழலையும் நிகரில்லை
கொஞ்சும் மொழி தன் சொந்தமென்றால் -இனி
எஞ்சிய மொழியிங்கு ஏதுமில்லை
தென்றல் நடைபயின்றவள் வருகையிலே-இனி
தேருக்கும் எதிர்வரத் துணிவில்லை
அன்னம் தோற்கும் அழகுநடை-இனிப்
பின்னே சொல்லிட வார்த்தையில்லை
இத்தனை குணம்களைக் தாங்குமவள்-ஒரு
மொத்தத்தில் உயிருள்ள அழகுச்சிலை
சித்தம் மயக்கிடும் சீரெழிலாள்-எந்தன்
சிந்தையில் நிறைந்து வாழுகின்றாள்..
No comments:
Post a Comment